சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவங்களில் பலர் பலியாகியும் உள்ளனர். இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று வாஷிங்டனில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ளது. இதனை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது ரசிகர்களோடு ரசிகராக இருந்த மர்ம நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ரசிகர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாலாபுறமும் தலைத்தெறித்து ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
‘ஆணுறுப்பு சின்னதா இருக்கு’ – கேலி செய்த போலீஸ் டிஸ்மிஸ்!
அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த பின்னர்தான் இந்த சம்பவத்தில் உயிர் பலி ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்த தகவல் தெரியவரு் என்று வாஷிங்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் உயிர் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலம்பியா அதிபராக குஸ்டாவோ பெட்ரோ தேர்வு – முதன்முறையாக இடதுசாரி ஆட்சி!
இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நிகழ்த்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.