வெளுத்து வாங்கிய கனமழை முதல் தேர்வு முடிவுகள் வரை…. இன்றைய முக்கியச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அத்துடன் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பதிவு இன்று தொடங்குகிறது.
அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டோருக்கு பணி வழங்கப்படாது எனவும் உறுதி.
அக்னிபாத் திட்டம் பற்றி தவறான தகவல் பரப்பியதாக, 35 வாட்ஸ்அப் குழுக்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தொடர்பாக இன்று மீண்டும் விசாரணைக்க ஆஜராகிறார் ராகுல்காந்தி.
பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்தது மாநில அரசு
இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ட்வெண்டி-ட்வெண்டி கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து. 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது தொடர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.