சென்னை: 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை 42,000 மாணவர்கள் எழுதுவில்லை என்றும், இது 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் தேர்ச்சி பெற்றனர். சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 242 பேரில், 133 பேர் தேர்ச்சி பெற்றனர்.
குறிப்பாக, தேர்வு எழுத தகுதி பெற்று இருந்தவர்களில் 42,519 பேர் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த எண்ணிக்கை, கடந்த 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் ஆகும். 2019-ம் ஆண்டில் 20,053 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று குறிப்பிடத்தக்கது.