தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி பதிவு செய்யும் அரசியல் கட்சிகள், ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்றால் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் தனித்தோ, கூட்டாகவோ குறிப்பிட்ட சதவீதம் வாக்குகளை பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் கட்சிகளுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அளிக்கிறது. அதேசமயம் இந்த நிபந்தனைகளை குறிப்பிட கால வரையறைக்குள் பூர்த்தி செய்ய தவறும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுக்கிறது.
இந்த வகையில் தற்போது அங்கீகாரம் கோரி பதிவு செய்துள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளில் 111 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ள முகவரியில் கட்சி அலுவலகம் செயல்படாதது உள்ளிட்ட காரணங்களால் 111 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.