சென்னை: 12-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
97.27 சதவீதத்துடன் விருதுநகர் 2-வது இடத்தையும், 97.02 சதவீதத்துடன் ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 86.69 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. மேலும், பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆதிராவிடர் நலப்பள்ளிகள் 82.21 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதர முக்கிய அம்சங்கள்:
- ஆதிதிராவிடர் பள்ளிகள் – 82.21 சதவீதம்
- ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் – 99.11 சதவீதம்
- சிபிஎஸ், ஐசிஎஸ்சி மற்றும் மாநில பாடத் திட்ட பள்ளிகள் – 99.54 சதவீதம்
- மாநகராட்சிப் பள்ளிகள் – 89.81 சதவீதம்
- வனத்துறை பள்ளிகள் – 93.25 சதவீதம்
- முழு அரசு உதவி பெறும் பள்ளிகள் – 94.87 சதவீதம்
- அரசுப் பள்ளிகள் – 89.06 சதவீதம்
- இந்து சமய அறநிலையத் துறை பள்ளிகள் – 94.55 சதவீதம்
- கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் – 94.52 சதவீதம்
- நகராட்சிப் பள்ளிகள் – 90.30 சதவீதம்
- ஒரியாண்டல் பள்ளிகள் – 99.35 சதவீதம்
- பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் – 96.36 சதவீதம்
- ரயில்வே பள்ளிகள் – 94.12 சதவீதம்
- சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் – 99.15 சதவீதம்
- பள்ளிக் கல்வி துறைக்கு கீழ் உள்ள சுயநிதி பள்ளிகள் – 98.60 சதவீதம்
- சமூக நலத்துறை பள்ளிகள் – 92.67 சதவீதம்
- பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் – 86.89 சதவீதம்