ஸ்டார்ட் அப் நிறுவனமான சிட்டி மால் 191 ஊழியர்களை பணி நீக்கம் செய்யதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது வளர்ந்து வரும் வணிக மாதிரி மற்றும் தற்போதைய வணிக சூழ்நிலைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்க பல ஊழியர்களும் பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பல கட்டமாக இது குறித்து ஆராய்ந்த பின்னரே நிறுவனம், இப்படியொரு கடினமான முடிவினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு திடீர் எச்சரிக்கை.. பாகிஸ்தான், இலங்கை பொருளாதார வீழ்ச்சியின் எதிரொலி..!
உதவி செய்ய தயார்
தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு நிறுவனம் சில ஊழியர்களை பணி நீக்கம் செய்தாக வேண்டிய நிலையை உணர்ந்துள்ளது. ஊழியர்களை பணி நீக்கம் செய்தாலும், அவர்கள் வேறு நிறுவனங்கள் பணியில் சேரவும், தேவையான உதவிகளை செய்யவும் நிறுவனம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடினமான முடிவு
இது நிறுவனம் எடுத்த கடினமான ஒரு முடிவு, இதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள். எனினும் எங்கள் வணிகத்தினை மறுசீரமைக்கும் கட்டாயத்தில் உள்ளோம் என தெரிவித்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து பணியமர்த்தல் நடவடிக்கையும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியினை மீட்க நடவடிக்கை
சிட்டி மால் குழுமம் கடந்த மார்ச் மாதத்தில் தான் 75 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை திரட்டியது. தற்போது தான் புதியதாக ஸ்டார்ட் அப் பட்டியலில் இணைந்த நிறுவனம், தற்போது கடினமான முடிவினை எடுத்துள்ளது. இது வளர்ச்சி விகிதமானது மெதுவாகி வரும் நிலையில், வளர்ச்சியினை தக்க வைத்துக் கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட் அப்களில் தொடரும் பணி நீக்கம்
சமீபத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களான மீஸோ, கார்ஸ் 24. அன் அகாடமி உள்ளிட்ட நிறுவனங்கள் 4000 ஊழியர்களை கடந்த 2 மாதங்களில் பணி நீக்கம் செய்தன. இந்த நிலையில் தற்போது சிட்டி மால் நிறுவனமும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
ஃபெர்பார்மன்ஸ் அடிப்படையில் பணி நீக்கம்
குர்கானை தலைமையிடமாகக் கொண்ட சிட்டி மால் நிறுவனத்தில் செய்யப்பட்ட பணி நீக்கமானது, ஃபெர்பார்மன்ஸ் அடிப்படையில் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் நடப்பில் உள்ள பல்வேறு மோசமான காரணிகளுக்கு மத்தியில், பொருளாதாரம் மந்த நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகின்றன.
Citynmall lay off 191 employees after raising 75 million dollar funding
Start-up’s City Mall has reportedly laid off 191 employees.