வாடகைத் தாயார் வழியாக 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ரஷ்ய பெண் ஒருவர், தமது மில்லியனர் கணவர் பண மோசடி வழக்கில் சிக்கி கைதானதால் எதிர்காலம் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
ஜார்ஜியாவின் படுமி பகுதியில் வசித்துவரும் 24 வயது Kristina Ozturk என்பவர் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2021 ஜூலை வரையில் வாடகைத் தாயார்களுக்காக சுமார் 168,000 யூரோ தொகையை செலவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, தமது பிள்ளைகளை பராமரிக்கும் பொருட்டு 16 ஆயாக்களை பணியமர்த்தி, ஆண்டுக்கு 90,000 யூரோ வரையில் செலவிட்டு வந்துள்ளார்.
துருக்கியை சேர்ந்த தொழிலதிபர் 57 வயதான Galip Ozturk என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் இணைந்து மொத்தம் 105 பிள்ளைகளை வாடகைத் தாயார் மூலம் பெற்றெடுக்க முடிவு செய்தனர்.
ஆனால் தற்போது 21 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், பண மோசடி மற்றும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ள வழக்கில் Galip Ozturk கைதாகியுள்ளார்.
1996ல் ஒரு கொலை தொடர்பான அவரது ஆயுள் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் ஏற்கனவே 2018ல் துருக்கியை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், 21 பிள்ளைகளுக்கு தாயாரான Kristina Ozturk தமது கணவரின் திடீர் கைதால், எதிர்காலம் இருளடைந்து போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் Galip Ozturk-கு சொந்தமான ஹொட்டல் ஒன்றில் இருந்தே சிறப்பு அதிரடிப்படையால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பிள்ளைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்த இந்த தம்பதி, வாடகைத் தாயார் முறையை பின்பற்றியுள்ளது.
இவர்களது முதல் குழந்தை 2020 மார்ச் 10ம் திகதி பிறந்தது. 21வது குழந்தை பிறந்து தற்போது மூன்று மாதங்களே நிறைவடைந்துள்ளது.
குழந்தைகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் வாரம் 4,000 பவுண்டுகளை அவர் செலவிட்டுள்ளார்.
மேலும், தங்களின் 21 பிள்ளைகளையும் பராமரிக்கும் பொருட்டு 16 ஆயாக்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
105 பிள்ளைகள் தான் தங்களின் இலக்கு என கூறிவந்துள்ள நிலையில், Galip Ozturk கைதாகியுள்ளது, தங்களின் கனவு மட்டுமல்ல வாழ்க்கையும் ஸ்தம்பித்துள்ளதாக Kristina Ozturk கண்கலங்கியுள்ளார்.