7வது சம்பள கமிஷன்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

வரவிருக்கும் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மிகப்பெரிய முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, 18 மாதங்களாக நிலுவையில் இருக்கும் அகவிலைப்படி, வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி ஆகியவை அடங்கும்.

எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான அறிவிப்புகள் வரலாம். இது ஊழியர்களுக்கு எந்த மாதிரியான சாதகமான பாதிப்பினை ஏற்படுத்தலாம். வாருங்கள் பார்க்கலாம்.

5% அகவிலைப்படி அதிகரிக்கலாம்

ஜூலை மாதத்தில் 5% அகவிலைப்படி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பானது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பயன் அளிக்கலாம் என எதிர்பார்க்கபபடுகிறது. இதன் மூலம் டிஏ விகிதம் 39% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் அல்ல ஜூலை மாதத்தில் இன்னும் சில சர்ப்ரைஸ்களையும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலுவை அகவிலைப்படியை வழங்கலாம்

நிலுவை அகவிலைப்படியை வழங்கலாம்

18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அகவிலைப்படி அதிகரிக்கலாம். ஜனவரி 2020 முதல் ஜூன் 21 வரையிலான 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஏ விகிதம் ஊழியர்களின் சம்பளத்தினை பொறுத்து இருக்கலாம்.

வட்டி விகிதம் அளிக்கப்படலாம்
 

வட்டி விகிதம் அளிக்கப்படலாம்

இபிஎஃப் குழுவில் வட்டி விகிதம் வருடத்திற்கு 8.10% ஆக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ குழு விரைவில் இந்த வட்டி விகிதத்தினை சந்தாதார்ர்களின் கணக்கில் வரவு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் பிஎஃப் சந்தாதாரர்கள்

ஊக்கத் தொகை அறிவிப்பு வரலாம்

ஊக்கத் தொகை அறிவிப்பு வரலாம்

முன்னதாக மத்திய அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஊழியர்கள் பணிபுரியும்போது உயர்கல்வி படித்தால், அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது உயர் பட்டப்படிப்பு முடித்த ஊழியர்களுக்கு, அரசு ஊக்கத் தொகையை 5 மடங்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளது.இந்த ஊக்கத் தொகையானது Phd போன்ற உயர்கல்விகளுக்கு பொருந்தும். இந்த ஊக்கத் தொகை தான் 10,000 ரூபாயில் இருந்து 30,0000 ரூபாயாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

7th Pay Commission: These 3 big developments may happen in coming month

Three major announcements are expected to come to federal government employees in July.

Story first published: Monday, June 20, 2022, 20:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.