தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று, பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டது.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
12ம் வகுப்பில் – 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு – 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 8.55% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை, ஆகஸ்டில் உடனடிதேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பிற்கு ஜூலை 25ம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும். 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் உடனடி தேர்வுகள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிவித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.