’OPS சுமுகமாக போகலாம்னு இருக்காரு.. ஆனால் EPSதான் விட்டுக்கொடுக்க மாட்றாரு’ – புகழேந்தி

சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிகழ வாய்ப்பு இருப்பதால் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என்று காவல்துறை டி.ஜி.பியிடம் ஓ.பி.எஸ் தரப்பு மனு. இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டு.
அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வருகிற 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அதன் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஓபி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியுமான புகழேந்தி, வழக்கறிஞர் சதீஷ், எம்.ஜி.ஆர் மன்ற வடசென்னை மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றாக வந்து மயிலாப்பூரில் உள்ள காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை இன்று கொடுத்தனர்.
இதையடுத்து ஓ.பி.எஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ரவுடிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் எங்களுக்கு வந்துள்ளது.
ALSO READ: 
’திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்; ஓபிஎஸ் நிச்சயம் பங்கேற்பார்’ – கே.பி.முனுசாமி
இதனால் பொதுக்குழு கூட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஓ.பி.எஸ் பொதுக்குழுவை தள்ளிவைக்கலாம் என தெரிவித்துள்ளார். மீறி பொதுக்குழு கூட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்துவதற்காகவே இந்த கூட்டத்தை இ.பி.எஸ் தரப்பினர் நடத்த உள்ளனர். இதனால் காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.
அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் எடுக்கும் முடிவுதான் இறுதியான முடிவு. தொண்டர்கள் ரத்தம் சிந்துவதை ஓ.பி.எஸ் விரும்பவில்லை. சுமூகமாக சென்றுவிடலாம் என கூறிய பிறகும் இ.பி.எஸ் விட்டுக்கொடுப்பதில்லை. அ.தி.மு.க கட்சியில் பதவிக்காக வரவில்லை. ஓ.பி.எஸுக்கு ஆதரவாக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன்” என்று புகழேந்தி கூறியுள்ளார்.
புகழேந்தியின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ: 

“அண்ணன் இபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்; மக்கள் ஆதரவு அவருக்கே” – கோகுல இந்திராSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.