அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்றும், தீவைப்பு, நாசவேலைகளில் ஈடுபடவில்லை என்ற உறுதி சான்றிதழை இளைஞர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ராணுவ விவகாரத்துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 50 சதவீதம் பேர் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும், இதனை ராணுவம் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டார்.