பொதுமக்கள் அடுத்த மாதம் வரை பொறுமையுடன் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைக்கு பொதுமக்கள் அனைவரும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறித்து அரசாங்கம் தெளிவாக அறிந்துள்ளது. உண்மையில் மிகச் சிரமமான காலப் பகுதியொன்றையே நாம் கழித்துக் கொண்டிருக்கின்றோம்.
அடுத்த மாதம் நெருக்கடிகள் தளர்வு
பெரும்பாலும் அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் இந்த நெருக்கடி நிலைமையில் ஓரளவுக்குத் தளர்வுகள் ஏற்பட்டு ஆறுதல் கிடைக்கலாம்.
எனவே பொதுமக்கள் அதுவரை பொறுமையுடன் தாக்குப் பிடித்துக்கொண்டு தங்கள் அலுவல்களை மேற்கொள்ள வேண்டும். நாம் பொறுமையுடன் தாக்குப்பிடிக்காது போனால் இந்த நாடு மீண்டும் 1980களில் இருந்த துரதிஷ்டமான பஞ்ச நிலைமைக்கு பின்தள்ளப்பட்டுவிடும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.