சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த அனுமதிக்க கூடாது என ஒபிஎஸ் தரப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ள நிலையில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.