அப்படியே காலை தூக்கி ஓங்கி அடித்து போலீஸை தவிக்கவிட்ட குடிமகள்..! பல்டி அடித்து ரோட்டில் உருண்டு ரகளை.!

குடி போதையில் வாகனம் ஓட்டிய பெண்ணிடம் சிக்கி, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தவித்த சம்பவத்தின் வீடியோகாட்சிகள் வெளியாகி உள்ளது. மும்பை சாலையில் குடிமகள் செய்த ரகளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

குடிச்சிட்டு கார் ஓட்டிய அந்த பொண்ண பார்த்த போலீசாருக்கு முதலில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அது நம்மகிட்ட சிக்கவில்லை, நாம் தான் அந்த குடிமகளிடம் சிக்கி இருக்கிறோம் என்று..!

மும்பையில் குடி போதையில் காரை ஓட்டிவந்த பெண் போலீசில் சிக்கினார். போலீசிடம் சிக்கிய பெண் அந்த காவலரின் சட்டையை பிடித்து மயக்குவது போல அருகில் சென்று தலையை வாருவது போல சென்று , திடீரென கராத்தே காமினியாக மாறி அப்படியே காலை தூக்கி ஒரு கிக் கொடுக்க, நல்ல வேளை அந்த போலீஸ் காரர் விலகியதால் தப்பித்தார்..!

தன்னுடன் காரில் வந்த இரு தோழிகளிடமும் வம்பு செய்து, ஸ்டெடியாக நிற்பதற்கு சப்போர்ட் தேடிய அந்த சவுண்டு சரோஜா, அருகில் நின்ற இரு சக்கரவாகனத்தை தள்ளிவிட்டார்

குடித்து விட்டு தான் செய்யும் ரகளையை வேடிக்கை பார்த்த இளைஞர்களிடம் வம்புக்கு செல்ல அவருடன் காரில் வந்த பெண் சமாதானம் செய்ய முயன்றார். அடுத்த நொடி சூப்பர் சுப்பம்மாவாக மாறி ஓங்கி ஒரு குத்துவிட, அந்த பெண் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொள்ள குடிமகள் செத்த எலியாக பொத்தென்று சாலையில் விழுந்தார்

எழுந்திரிக்க மறுத்து ஏதோ மெத்தையில் படுத்து கிடப்பது போல சாலையில் படுத்து உருண்டு புரண்டு பாட்டுப்பாடிக்கொண்டு அட்ராசிட்டி செய்தார்

போலீஸ் வாகனத்திற்கு அருகே வந்து போலீசாரை பார்த்து ஆபாச சைகை காட்டிய நிலையிலும் அந்த பெண் மீது இரக்கப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்காமல் போனால் போகட்டும் என்று தோழிகளுடன் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குடிக்கார பெண்ணின் குட்டிச்சேட்டை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அந்த குடிகார பெண் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

மதுவை நாடிச்சென்றால்.. அதுவும் அளவுக்கதிகமாக அருந்தினால்… என்ன மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு குடித்து விட்டு வாகனம் ஓட்டி சிக்கிய இந்த பெண்ணே சாட்சி..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.