அம்பானிக்கு ஆயில், டாடாவுக்கு நிலக்கரி: ரஷ்யாவிடம் இருந்து 75 ஆயிரம் டன்கள் இறக்குமதி!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் காரணமாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்பட எந்த பொருளையும் வாங்க மாட்டோம் என அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தெரிவித்து உள்ளன.

ஆனால் இந்திய ஆயில் நிறுவனங்கள் மட்டும் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை மிகப்பெரிய அளவில் வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், ரஷ்யாவிடமிருந்து 30 சதவீத சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென வேகமெடுக்கும் ரஷ்யா – இந்திய வங்கி சேவை.. இதுதான் காரணமா..?!

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தை அடுத்து டாடாவின் டாடா ஸ்டீல் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து 75,000 டன் நிலக்கரியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

75,000 டன்கள் நிலக்கரி

75,000 டன்கள் நிலக்கரி

கடந்த மே மாதத்தின் இரண்டாம் பகுதியில் ரஷ்யாவிடமிருந்து 75,000 டன் நிலக்கரியை டாடா ஸ்டீல் நிறுவனம் இறக்குமதி செய்திருப்பதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி

கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யாவிடமிருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்வதில்லை என டாடா நிறுவனம் அறிவித்த நிலையில் தற்போது 75,000 டன் நிலக்கரியை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம்
 

ஒப்பந்தம்

இதில் 42,000 டன்கள் நிலக்கரி பாரதீப்பில் உள்ள துறைமுகத்திற்கும் 32,500 டன்கள் ஹால்டியா என்ற துறைமுகத்திற்கும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியபோது, ‘ரஷ்யாவுடனான 75,000 டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு முன்னால் செய்யப்பட்ட ஒப்பந்தம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம்

விளக்கம்

ஆனால் அதே நேரத்தில் இந்த இறக்குமதி தவிர ரஷ்யாவிடமிருந்து வேறு எந்த நிலக்கரியையும் வாங்கவில்லை என்றும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததை உலக நாடுகள் கண்டித்த போது இந்தியா மட்டும் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்தது அதுமட்டுமின்றி சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியை நிறுத்த போவதாக அறிவித்த ஒரே நிறுவனம் டாட்டா ஸ்டீல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மற்ற இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் ரஷ்யாவிடமிருந்து அதிக நிலக்கரியை இறக்குமதி செய்து வருவதாக ஏற்கனவே ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Steel buys 75,000 tonnes of coal from Russia

Tata Steel buys 75,000 tonnes of coal from Russia | அம்பானிக்கு ஆயில், டாடாவுக்கு நிலக்கரி: ரஷ்யாவிடம் இருந்து 75 ஆயிரம் டன்கள் இறக்குமதி!

Story first published: Tuesday, June 21, 2022, 7:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.