ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுமார் 70 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. அதிக வட்டி தருவதாக அறிவிக்கப்பட்ட, கவர்ச்சிகரமான திட்டங்கள் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், கடந்த மே மாதம் 24ம் தேதி இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
அதில் கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் என 14 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.