இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கிரெடிட் கார்டுகளைச் செயல்படுத்துவது மற்றும் அவற்றின் வரம்புகள் தொடர்பான தேர்ந்தெடுக்கப்பட்ட விதிகளுக்கு மூன்று மாத கால நீட்டிப்பை வழங்கியுள்ளது.
ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்குக் கொண்டு வர ரிசர்வ் வங்கி முன்பு அறிவித்து இருந்த நிலையில் தற்போது 3 மாத கால நீட்டிப்புக்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ள காரணத்தால் இந்த விதிகள் இப்போது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.
சரி கிரெடிட் கார்டில் எப்படி என்ன மாற்றங்களைக் கொண்டு வர ஆர்பிஐ உத்தரவிட்டு இருந்து..? இதனால் மக்களுக்கு என்ன லாபம்..?
கடனை திரும்ப தருவது குற்றமா.. லோன் ப்ரீ க்ளோஸ் செய்யும் வாடிக்கையாளர்களை வங்கிகள் அலைகழிப்பது ஏன்?!
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி மார்ச் மாதம் மக்களுக்குக் கிரெடிட் கார்டு வழங்குவது குறித்து வங்கிகளுக்கு, NBFC-களுக்கு, பின்டெக் நிறுவனங்களுக்கு ஒரு முக்கியமான மாஸ்டர் விதிமுறை மாற்றங்கள் கொண்ட அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் கிரெடிட் கார்டு வழங்குவதிலும், பயன்படுத்துவதிலும், வாடிக்கையாளர் பாதுகாப்பு அளிப்பதிலும் முக்கியமான மாற்றங்கள் அடங்கியுள்ளது.
OTP ஒப்புதல்
இப்புதிய விதிமுறையின் கீழ் கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் அதை ஆக்டிவேட் செய்வதற்கு அட்டைதாரரிடம் (கஸ்டமர்) இருந்து கட்டாயம் OTP ஒப்புதலைப் பெற பின்னரே ஆக்டிவேட் செய்ய வேண்டும். மேலும் வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தாமல் இருந்தால். 30 ஆம் நாளிலிருந்து ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு எந்தச் செலவும் இன்றிக் கிரெடிட் கார்ட் கணக்கை மூடப்படும்.
வங்கிகளுக்கு நஷ்டம்
புதுப்பிக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட அட்டையாக இருந்தால் அட்டைதாரரின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் செலுத்திய பின்பு கணக்கை மூடப்படும். ரிசர்வ் வங்கியின் இந்த மாஸ்டர் அறிக்கையின் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வங்கிகளுக்குக் கூடுதல் பணிச் சுமை உருவாகியுள்ளது.
பயன்படுத்தாமல் இருக்கும் கிரெடிட் கார்டு
இப்புதிய விதிமுறை மூலம் கிரெடிட் கார்டை வாங்கிய பின்பு பயன்படுத்தாமல் இருக்கும் இருப்போர் எண்ணிக்கை குறையும், மேலும் கிரெடிட் கார்டு-ஐ முடக்க இனி எவ்விதமான கட்டணமும், சுமையும் இல்லாமல் எளிதாக மூட முடியும்.
6 மாத கோரிக்கை
இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த முன்னதாக ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரியிருந்தது, ஆனால் ரிசர்வ் வங்கி 3 மாதம் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த விதிகள் அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும்.
திடீரென வேகமெடுக்கும் ரஷ்யா – இந்திய வங்கி சேவை.. இதுதான் காரணமா..?!
Credit Card Rule Change; RBI has given a three-month extension from July 1 to Oct 1
Credit Card Rule Change; RBI has given a three-month extension from July 1 to Oct 1 ஆர்பிஐ அறிவிப்பால் வங்கிகள் செம குஷி.. ஜூலை 1 வர வேண்டிய கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு..!