இந்தியாவில் மேலும் 9,923 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,923 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,19,396 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 7,293 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,15,193 ஆனது. தற்போது 79,313 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவிட் காரணமாக 17 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்தது.

latest tamil news

இந்தியாவில் இதுவரை 196.32 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 13,00,024 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.