மும்பை: பாப் ஸ்டார் ஜஸ்டின் பைபரைப் போல் தனக்கும் முக பக்கவாதம்
ஏற்பட்டதாக நடிகை ஐஸ்வர்யா சகுஜா கூறினார். இந்திப் படங்கள் மற்றும் டிவி
தொடர்களில் நடித்துள்ள அவர் கூறியது: சில ஆண்டுகளுக்கு முன்பு
நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை பூஜா சர்மாவுடன் தயாராகி, கண்ணாடியைப்
பார்த்து மேக்கப் போட்டேன். என் முகத்தைப் பார்த்து, ஏதோ மாற்றம் தெரிகிறது
என்று பூஜா சொன்னார். சில நாட்களிலேயே எனக்கு முகத்தில் ஒருபுறம் செயல்
இழந்தது போல் தோன்றியது. டாக்டரிடம் சென்றேன். மருத்துவப் பரிசோதனைகள்
முடித்துவிட்டு, எனக்கு ஜஸ்டினைப் போல் முக பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக
கூறினார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தொடர்ந்து இதற்காக
ஓய்வெடுத்து மருத்துவ சிகிச்சை பெற்றேன். ஆனால், சீக்கிரமாக இந்த நோய்
குணமாகவில்லை. இதனால் எனக்கு வந்த பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. அது
பெரும் சோதனையான காலமாக இருந்தது. தொடர் சிகிச்சைக்குப் பிறகு இந்த நோயில்
இருந்து விடுபட்டு வந்தேன். இப்போது நினைத்தாலும் அது பெரும் பயங்கரமாக
தோன்றும். குடும்பத்தினரின் ஆதரவு, அன்பால்தான் அதிலிருந்து விடுபட்டு
வந்தேன்.