ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் டால்ஃபின், மீன் மட்டுமல்ல 3வது ஒரு உயிரினம் இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடிங்க… 1% கூர்மையான பார்வையும் அறிவுத்திறனும் மிக்கவர்களின் வரிசையில் இடம்பிடியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு கப்பல் இருக்கிறது. அருகே ஒரு டால்ஃபீன் மீனை சாப்பிடுகிறது. இதில் 3வதாக ஒரு உயிரினம் இருக்கிறது அதை கண்டுபிடியுங்கள் என்பதே உங்களுக்கான சவால் ஆகும்.
கார்னியல் கால்குலஸை விவரிக்கும் இந்த வைரல் வீடியோவில், இந்தப் படத்தில் மூன்றாவது உயிரினத்தை 1 சதவிகிதம் பேர் மட்டுமே சரியாக கண்டுபிடித்துள்ளார்கள் என்று ஆப்டிகல் இல்யூஷன் ஆர்வலர் @pasillusion கூறுகிறார்.
இந்த படத்தில் 3வது உயிரினத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்களுக்காக ஒரு குறிப்பைத் தருகிறோம். அப்படியே இந்த படத்தை தலைகீழாக பாருங்கள். இப்போது 3வது உயிரினம் ஒரு பறவையைப் பார்ப்பீர்கள். ஒரு பறவை அல்ல பல பறவையைப் பார்ப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? யாரும் கணிக்க முடியாத அளவுக்கு தலைகிழாக பார்க்கும்போது பறவை தோன்றி ஆச்சரியமளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“