கொழும்பு:இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பார்லி., கூட்டத்தை, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதனால் அரசு ஊழியர்களுக்கு வெள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல பார்லி., கூட்டமும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் நடக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை பார்லி., கூட்டம் துவங்கியது.
இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் சஜித் பிரேமதாசா, அனுரா குமாரா திசநாயகே ஆகியோர் பேசினர். அப்போது, ‘தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாமல் பார்லி., கூட்டம் நடப்பதில் ஒரு பயனும் கிடையாது’ எனக் கூறி அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து பார்லி., சபாநாயகர் தினேஷ் குணவர்த்தனே,” எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாரத்தில் நான்கு நாட்களுக்குப் பதிலாக இரண்டு நாட்கள் மட்டுமே பார்லி., கூட்டம் நடக்கும்,” என்றார். இதற்கு பார்லி., உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement