இலங்கை வங்கி வரலாற்றில் இல்லாதவாறு 43 பில்லியன் ரூபாய் வரி முன் இலாபத்தை ஈட்டியுள்ளது.
இலங்கை வங்கியின் 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை இம்மாதம் 10ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த இந்த அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பித்தார்.
கடன் திட்டங்களை விரிவுபடுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவையை வழங்கியதன் மூலம் குறித்த இலக்கு அடையப்பட்டுள்ளது. அரச வங்கியின் பொறுப்பின் கீழ் இந்த நன்மைகள் பொதுமக்களுக்கு மீள வழங்கப்படும் என இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்த தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் கே.ஈ.டி. சுமணசிறி, மேலதிக பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, பிரதி முகாமையாளர்களான வை.ஏ.ஜயதிலக்க, பியல் சில்வா, ருவன் குமார ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
21.06.2022