ஈரோடு மாவட்டத்தில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கங்காபுரம் ஆட்டையாம்பாளையம் கிழக்குவீதி பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று செங்கப்பள்ளியிலிருந்து பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது பல்லகவுண்டன்பாளையம் பகுதி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கந்தவேல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் கந்தவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.