உங்களை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் அனைத்தும் சாத்தியம்.. விஜே  பிரியங்கா சொல்ல வருவது என்ன?

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார்.

பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

பிறகு, பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல, யாருமே எதிர்பாராதவிதமாக, மாகாபா ஸ்டார் மியூசிக் சீசன் 3யை தொகுத்து வழங்கினார். இது பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தன்னுடைய நகைச்சுவையான பேச்சுத்திறமை மூலம், மாகாபா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

இப்போது பிரியங்கா பிபி ஜோடிகள் 2, மாகாபா-வுடன் சேர்ந்து ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட, பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும். போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். உன்னி கிருஷ்ணன் முதல் அணுராதா வரை எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார். அந்தளவுக்கு சூப்பர் சிங்கர் என்றாலே, பிரியங்காவும், மாகாபாவும் தான் என்றாகிவிட்டது.

இப்படி என்னதான் பிரியங்கா, தன் புரொஃபஷனல் வாழ்க்கையில் ஜொலித்துக் கொண்டிருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது இன்னும் விடைத் தெரியாத புதிராகவே உள்ளது.

கடந்த சில வருடங்களாக கணவர் பிரவீனைப் பற்றி எதுவும் பேசாத பிரியங்கா, கணவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட வெளியிடாததால் இருவரும் பிரிந்து விட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த விஷயத்தில் பிரியங்கா மவுனம் காத்து வருகிறார்.

பிக்பாஸ் ஃபிரிஸ் டாஸ்க்கில் கூட, பிரியங்காவை அவரது தாய் மட்டுமே சென்று பார்த்தார், அவரது கணவர் வரவில்லை. மேலும், 100 நாள் கேம் ஷோவில் ஒருமுறை கூட பிரியங்கா, தனது கணவரைப் பற்றி வெளிப்படையாகக் கூறவில்லை.

சமீபத்தில், பிரியங்காவின் சகோதரருக்கு குழந்தை பிறந்தது, அந்த குழந்தையுடன் இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ஆனால், படத்தில் பிரியங்காவின் கணவர் இல்லை.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், இன்ஸ்டாவில் பிரியங்காவிடம் நெட்டிசன் ஒருவர், “கல்யாணத்திற்கு பிறகும் எப்படி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்து கொள்கிறீர்கள்?” என கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியங்கா, “உங்களை புரிந்து கொள்ளும்படியான கணவர் இருந்தால் அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் அனைத்தும் சாத்தியமாகும்” என கூறினார்.

பிரியங்காவின் இந்த பதில் விஷயங்களை தெளிவுபடுத்தவில்லை என்றாலும், அவரது பதிலைக் கேட்டு ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.