இன்று உலகம் முழுவதும் யோகா தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மனித நேயத்திற்காக யோகா’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த யோகா தினத்தைக் கொண்டாடவும், பிரபலப்படுத்துவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஜூன்21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று 8-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை: பில்கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை என்ன சொல்கிறார்கள்?
யோகா – வர்த்தகம்?!!
இந்நிலையில் இந்தியாவில் யோகா மிகப்பெரிய வர்த்தகமாக மாறியுள்ளது, இதிலும் குறிப்பாக நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா நகரமான கோவா-வில் யோகா மற்றும் யோகா சார்ந்த வர்த்தகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
யோகா கலை
இந்தியாவில் உருவான இந்த யோகா கலை மனிதர்களின் உடல், மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கிய நடைமுறை அறியப்படுவது மட்டும் அல்லாமல் பல ஆண்டுகளாக வெளிநாட்டிலும் பிரபலமடைந்து வருகிறது.
பிரபலங்கள்
இந்தியாவில் பாலிவுட் பிரபலங்களான கரீனா கபூர், பிபாஷா பாசு, ஷில்பா ஷெட்டி ஆகியோரில் துவங்கி ஹாலிவுட்-ல் ஜெனிஃபர் அனிஸ்டன், ஸ்டிங் மற்றும் மடோனா எனப் பலர் யோகா-வை பெரிய அளவில் பின்பற்றுவது மட்டும் அல்லாமல் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் அதிகளவில் பயனளிக்கிறது என நம்புகின்றனர்.
கோவா
வெளிநாடுகளில் யோகா வேகமாகப் பிரபலம் அடைந்து வரும் நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து ஓய்வெடுக்கவும் அமைதியைக் காணவும் அதிகளவிலானோர் விரும்பும் இடம் கோவா. கோவா என்றால் பார்டி, பீச், மதுபானம், கொண்டாட்டம் என்பதைத் தாண்டி யோகா மிகப்பெரிய ஆதிக்கத்தை உருவாக்கியுள்ளது.
யோகா சென்டர்கள்
கோவா-வில் மோர்ஜிம் மற்றும் மாண்ட்ரெம் போன்ற பல இடங்களில் யோகா பயிற்சியாளர்களுக்குக் கற்பிக்கவும், யோகா பயிற்சி வழங்குவதற்கான சேவை நிலையங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. இத்தகைய யோகா சென்டர்கள் எண்ணிக்கையைப் பார்க்கும் போது இச்சேவைக்கான வளர்ந்து வரும் சந்தையைக் காட்டுகிறது.
வெளிநாட்டுப் பயணிகள்
உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்குக் கோவாவில் உயர் தர யோகா பயிற்சிகள் வழங்கப்படுவது மட்டும் அல்லாமல் இதைச் சார்ந்து மிகப்பெரிய வர்த்தகமும் உருவாகியுள்ளது.
இந்திய பாரம்பரிய அனுபவம்
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளைக் கவரும் வகையில் இந்தியப் பாரம்பரிய அனுபவத்தை அளிக்கும் வண்ணம் யோகா மற்றும் ஆயுர்வேத விடுமுறை (Tour Plan) நாட்களை ஊக்குவித்து வருகின்றனர்.
5000 முதல் 20000 வரை
இத்தகையைத் திட்டத்தைத் தேர்வு செய்வோருக்குத் தங்குமிடத்தில் துவங்கி விடுமுறை திட்டத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு ரூ. 5000 மற்றும் ரூ. 10,000 வரை என்ற விலையில் பல பேக்கேஜ்கள் வழங்கப்படுகிறது. இதுவே பெரிய நிறுவனம், ஹோட்டல் என்றால் 15000 முதல் 20000 ரூபாய் வரையிலான திட்டமும் வழங்கப்படுகிறது.
யோகா பிரதானம்
இந்திய பாரம்பரிய அனுபவத்தை அளிக்கும் திட்டம் என்று அறிவிக்கப்படும் 90 சதவீத திட்டங்களில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. சமீப காலமாக இத்தகைய திட்டங்களை வெளிநாட்டினரைத் தாண்டி இந்தியர்களும் அதிகளவில் பயன்படுத்தும் காரணத்தால் இது மிகப்பெரிய டிரெண்டாக உள்ளது.
இந்தியா முழுவதும்
இதேபோல் பெரு நகரங்களில் மக்கள் தற்போது தங்களது மன அழுத்தத்தை நீக்கவும் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யோகா மற்றும் தியானத்தை அதிகளவில் நாடி செல்கின்றதால் கோவா-வை தாண்டி இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் யோகா பிரபலம் மட்டும் அல்லாமல் பெரும் வர்த்தகத்தையும் உருவாக்கியுள்ளது.
yoga turned out big business in India Beyond Wellness
yoga turned out big business in India Beyond Wellness உடல் & மன ஆரோக்கியத்தைத் தாண்டி மிகப்பெரிய வர்த்தகமாக மாறிய யோகா..!