உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 54.47 கோடியை தாண்டியது

ஜெனிவா,

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,47,99,140ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,00,68,585 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,83,88,823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 63,41,732 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு-8,80,54,080, உயிரிழப்பு – 10,38,385, குணமடைந்தோர் – 8,39,41,790

இந்தியா – பாதிப்பு -4,33,20,845, உயிரிழப்பு – 5,24,873 குணமடைந்தோர் – 4,27,07,900

பிரேசில் – பாதிப்பு -3,17,56,118, உயிரிழப்பு – 6,69,217, குணமடைந்தோர் – 3,04,30,308

பிரான்ஸ் – பாதிப்பு -3,01,81,415, உயிரிழப்பு – 1,49,106, குணமடைந்தோர் – 2,93,70,192

ஜெர்மனி – பாதிப்பு – 2,72,11,866, உயிரிழப்பு – 1,40,292, குணமடைந்தோர் – 2,61,97,700

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து – 2,25,08,928

ரஷ்யா – 1,84,00,927

தென்கொரியா – 1,82,80,090

இத்தாலி – 1,78,96,065

துருக்கி -1,50,85,742

ஸ்பெயின் – 1,25,63,399

வியட்நாம் -1,07,38,161

அர்ஜெண்டீனா – 93,41,492

ஜப்பான் – 91,49,733

நெதர்லாந்து – 81,32,482


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.