எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அவர்களது மனைவிகளுக்கு, அரசு ஸ்லீப்பர் மற்றும் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் (ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத) பெர்த்/ இருக்கைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள சிரமம் காரணமாக, தமிழகத்தில் பேருந்துகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதில் விஐபி கோட்டா டிக்கெட்டுகளும் அடங்கும். தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலர் அரசு ஸ்லீப்பர் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.
ஆனால், சமீபகால கோடை விடுமுறையின் போதும் இந்த பேருந்துகள் நிரம்பி வழிந்தன. எனவே, அரசுப் பேருந்துகளில் விஐபி முன்பதிவு ஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது, எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மட்டுமே இந்த ஒதுக்கீட்டின் கீழ் பயணிக்க தகுதியுடையவர்கள், அதுவும் ஏசி ஸ்லீப்பர் பஸ்களில் பெர்த்தில் பயணம் செய்ய முடியாது.
எனவே, டிக்கெட் முன்பதிவு வழிகாட்டுதல்களில் தகுந்த திருத்தம் செய்யுமாறு, மாநில போக்குவரத்து செயலாளர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திடம் (SETC) கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, எம்எல்ஏ/முன்னாள் எம்எல்ஏக்களுக்கு அனைத்து ஏசி ஸ்லீப்பர் பஸ்களிலும் ஒரு பெர்த்தையும் அவர்களுடன் வருபவர்களுக்கு ஒரு பெர்த்தையும் ஒதுக்குமாறு எஸ்இடிசி தனது கண்டக்டர்களிடம் இப்போது கூறியுள்ளது.
ஜூன் 18 அன்று அனைத்து டெப்போக்களுக்கும் சுற்றறிக்கையின்படி, அது இருக்கையுடன் கூடிய ஸ்லீப்பர் பேருந்தாக இருந்தால், அவர்களுடன் வருபவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்படலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“