ஜார்க்கண்ட் மாநிலம் Lohardaga மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
Banda கிராமத்தை சேர்ந்த Sandeep Oraon என்பவரும் அதே பகுதியை சேர்ந்த Kusum Lakra என்ற பெண்ணும் 3 வருடங்களாக திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இதனிடையே Sandeep Oraon கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்காளத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு பணிபுரியும் Swati Oraon என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு கிராமத்தினர் மற்றும் குஷன் மற்றும் ஸ்வாதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கிராம பஞ்சாயத்தில் விசாரணை நடைபெற்று இருவரையும் திருமணம் செய்ய வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.