இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 50 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து பல வங்கிகள் வாகன கடன், தனிநபர் கடன் மற்றும் வீட்டு கடன் ஆகியவற்றின் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன என்பதை பார்த்தோம்.
வங்கிகள் தான் வட்டி விகிதத்தை உயர்த்தின என்றால் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வட்டி விகிதத்தை உயர்த்தாது என்றே பலர் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ஆனால் தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் வட்டி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எல்ஐசி முடிந்தது.. அடுத்தது யுனிடெட் இந்தியா இன்சூரன்ஸ்-ஆ.. தனியார்மயமாக்கல் தொடரும்..?
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் கடனுக்கான வட்டியை 60 புள்ளிகள் வரை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
7.55% வட்டி விகிதம்
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் குறைந்த புள்ளிகள் அடிப்படையில் தான் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏற்கனவே கடந்த மாதம் 20 புள்ளிகள் உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 60 புள்ளிகள் உயர்த்தியுள்ளதால் கடன் வாங்கியவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட பின்னர் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வட்டி 7.55 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வட்டி விகிதங்கள்
எல்.ஐ.சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘வீட்டுக் கடன்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 20 முதல் 7.50% முதல் தொடங்கும் என்றும், முதன்மை கடன் விகிதம் (எல்எச்பிஎல்ஆர்) 15.30% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
CIBIL ஸ்கோர்
சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் அல்லது அதற்கு சமமான வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 7.50% என்றும், கடன் வாங்குபவர்கள் இந்த வட்டி விகிதத்தை CIBIL ஸ்கோர் 700க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால் மட்டுமே பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
CIBIL ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால்
மேலும், சம்பளம் பெறுபவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் CIBIL ஸ்கோர் 700க்கு அதிகமாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருந்தால், ரூ.50 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 7.55%, ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 7.755, மற்றும் ரூ. 2 கோடி முதல் ரூ.15 கோடி வரையிலான வீட்டுக்கடன்களுக்கு 7.90%க்கு வட்டி விகிதம் செலுத்த வேண்டும்.
CIBIL ஸ்கோர் 600-699 என இருந்தால்
600-699க்கு இடைப்பட்ட CIBIL மதிப்பெண்களுக்கு, ரூ.50 லட்சம் வரை 7.80%, ரூ.50 லட்சத்திற்கு மேல் ரூ.2 கோடி வரை 8%, மற்றும் ரூ.2 கோடிக்கு மேல் ரூ.15 கோடி வரை 8.15% வட்டி விகிதம் இருக்கும்.
CIBIL ஸ்கோர் 600 க்கும் குறைவாக இருந்தால்
600 க்கும் குறைவான கிரெடிட் ஸ்கோருக்கு ரூ.50 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 8.25% வட்டியும், ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடிக்கு 8.45% வட்டி விகிதமும், ரூ.2 கோடி முதல் ரூ.15 கோடிக்கு மேல் 8.65% வட்டியும் விதிக்கப்படும்.
LIC Housing Finance also hikes interest rate!
LIC Housing Finance also hikes interest rate! | ஒரே நம்பிக்கையும் போச்சு: வட்டியை உயர்த்திய எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் !