ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் அசாம் இறுதியாக இணைந்தது..!

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் அசாம் இறுதியாக ரேஷன் கார்டு போர்ட்டபிளிட்டி சேவையை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று உணவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இத்திட்டம் மூலம் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மலிவான விலையில் கிடைக்கும் மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் இருந்து எவ்விதமான பிரச்சனையுமின்றிப் பெற முடியும்.

ONORC திட்டம்

ONORC (One Nation, One Ration Card) இன் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 (NFSA) இன் கீழ் உள்ள பயனாளிகள், மானிய விலையுள்ள உணவு தானியங்களின் ஒதுக்கீட்டை எந்த மின்னணு விற்பனைப் புள்ளியில் இருந்தும் (ePoS) தாங்கள் விரும்பும் நியாய விலைக் கடைகளில் இருந்தும் பயோமெட்ரிக் அங்கீகாரத்துடன் கொண்ட ரேஷன் கார்டுகளைப் பயன்படுத்திப் பெறலாம் என மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

36வது மாநிலம்

36வது மாநிலம்

ONORC திட்டத்தை அமல்படுத்தும் 36வது மாநிலம்/ யூனியன் பிரதேசமாக அசாம் விளங்குகிறது என மத்திய உணவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதன் மூலம், ONORC திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்பை எடுத்துச் செல்லக்கூடியதாக மாற்றுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 காலம்
 

கோவிட்-19 காலம்

மத்திய உணவு அமைச்சகத்தின் தரவுகள் படி கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பு ஆதிகமாக இருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் NFSA பயனாளிகளுக்கு, குறிப்பாகப் புலம்பெயர்ந்த பயனாளிகளுக்கு, மானிய விலையில் உணவு தானியங்களை உறுதி செய்வதில் ரேஷன் கார்டு போர்ட்டபிளிட்டி கணிசமாகப் பங்களித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

71 கோடி பரிவர்த்தனை

71 கோடி பரிவர்த்தனை

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஆகஸ்ட் 2019 இல் தொடங்கப்பட்டது. 2019 முதல், சுமார் 71 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன, இதன் மூலம் சுமார் 40000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவு தானியங்கள் மானியத்தில் கொடுக்கப்பட்டு மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

மக்கள் பலன்

மக்கள் பலன்

தற்போது ஒவ்வொரு மாதமும் 3 கோடிக்கும் அதிகமான பரிமாற்றங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் வாயிலாக அளிக்கப்படுகிறது. NFSA மற்றும் PMGKAY திட்டத்தின் கீழ் மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள் என மத்திய உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Assam implemented One Nation, One Ration Card programme as last state

Assam implemented One Nation, One Ration Card programme as last state ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் அசாம் இறுதியாக இணைந்தது..!

Story first published: Tuesday, June 21, 2022, 22:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.