மேற்கத்திய நாடுகள் வழங்கிய போர் ஆயுதங்களை உக்ரைன் ராணுவம் முதல்முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத் துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நிலவரங்கள் குறித்த உளவுத்துறை தகவல்களை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் ஒவ்வொரு நாளும் வழங்கி வருகிறது.
இந்தநிலையில், போரின் 118வது நாளான இன்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்டுள்ள உளவுத் துறை தகவலில், ரஷ்ய படைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் நன்கொடையாக வழங்கிய ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனியப் படைகள் முதன்முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine – 21 June 2022
Find out more about the UK government’s response: https://t.co/caMOn7mcGv
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/0HsqaxnVVy
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) June 21, 2022
ரஷ்ய படைவீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கருங்கடலின் பாம்பு தீவுக்கு ஆயுதங்கள் மற்றும் பணியாளர்களை கொண்டு சென்ற ரஷ்ய கடற்படையின் இழுவை கப்பல் மேற்கத்திய ஆயுதத்தின் முதல் இலக்காக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இழுவை கப்பலின் இந்த இழப்பு, பாம்பு தீவை ஆக்கிரமித்து வைத்துள்ள ரஷ்ய படைவீரர்களுக்கு, கூடுதல் ஆதரவு அளிக்கும் ரஷ்யாவின் முயற்சியில் உள்ள சிரமத்தை எடுத்துக்காட்டுகிறது எனத் பிரித்தானிய அமைச்சகத்தின் உளவுத் துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு வலுவான இறுதி அடி…முன்னாள் அமெரிக்க தளபதி எச்சரிக்கை!
அத்துடன் உக்ரைனின் கடலோரப் பாதுகாப்புத் திறன் கருங்கடலின் வடமேற்குப் பகுதியில் கடல் கட்டுப்பாட்டை நிறுவும் ரஷ்யாவின் திறனை பெரும்பாலும் நடுநிலையாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.