ஹொங்ஹொங்கில் சுமார் 50 ஆண்டுகளாக முக்கிய அடையாளமாக இருந்த மிதக்கும் உணவகம் தென் சீனக் கடலில் மூழ்கியது.
கடலில் மூழ்கிய ஜம்போ மிதக்கும் உணவகம் (Jumbo Floating Restaurant) தாய் நிறுவனமான அபெர்டீன் ரெஸ்டாரன்ட் எண்டர்பிரைசஸ், இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது என்று கூறியது, ஆனால் குழு உறுப்பினர்கள் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் சனிக்கிழமையன்று மூழகத் தொடங்கியது என்று உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர். தென்சீனக் கடலில் உள்ள பாராசெல் தீவுகளைக் கடந்து செல்லும் போது கப்பலுக்குள் தண்ணீர் நுழையத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தந்தையை வெட்ட சென்ற மகன்.. பின்னர் அவருக்கே நிகழ்ந்த பயங்கரம்
மீட்பு நிருவத்தின் உதவியுடன் கப்பலை மீட்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், துரதிர்ஷ்டவசமாக, அது ஞாயிற்றுக்கிழமை மூழ்கியது என்று நிறுவனம் மேலும் கூறியது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 2020-ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்ததால், மிகப்பெரிய மிதக்கும் உணவகம் பங்குதாரர்களுக்கு நிதிச்சுமையாக மாறியது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் மற்றும் பிரித்தானிய தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 3 பில்லியனுக்கும் அதிகமான விருந்தினர்கள் பல ஆண்டுகளாக அதன் கான்டோனீஸ் (Cantonese) உணவுகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை!
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் இந்த உணவகம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், கோவிட்-19 தொற்றுநோய் வணிகத்திற்கு ஒரு அபாயகரமான அடியை ஏற்படுத்தியது. மெல்கோ இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஆபரேட்டர், 2013-ஆம் ஆண்டிலிருந்து இந்த வணிகம் லாபகரமாக இல்லை என்றும் பெரிய நஷ்டத்தை ஈட்டுவதாகவும் கடந்த மாதம் கூறினர்.
மூழ்கிய கப்பல் உணவகத்தை இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு அதை ஆய்வு செய்ய கடல் பொறியியலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். புதிய ஆபரேட்டருக்காகக் காத்திருக்கும் வேளையில், அந்தக் கப்பல் யாருக்கும் தெரியாத இடத்தில் வைக்கப்படவுள்ளது.