மத்தியப் பிரதேச மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று வைரல் ஆகியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஜூன் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வில் காஷ்மீர் தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விதான் மத்திய பிரதேசத்தில் புயலை கிளப்பியுள்ளது. ’காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா?’ என்பதுதான் அந்த கேள்வி. அந்த கேள்வியுடன் இரண்டு வாதங்கள் கொடுக்கப்பட்டது. அதன்பிற்கு பதிலுக்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
”கேள்வி: ’காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா?’
வாதம் 1: ஆம், இந்தியாவின் பணத்தை சேமிக்கும்
வாதம் 2: இல்லை. இதுபோன்ற முடிவு மேற்கொண்டு இதுபோன்ற கோரிக்கைகள் அதிகரிக்கச் செய்யும்
பதிலுக்கான நான்கு ஆப்ஷன்கள்:
A. வாதம் 1 வலிமையானது
B. வாதம் 2 வலிமையானது
C. இரண்டு வாதங்களும் வலிமையற்றது
D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது”
கேள்வித்தாளின் இடம்பெற்ற இந்த கேள்வியின் பக்கம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது தொடர்பாக பலரும் கேள்விகளை முன் வைத்தனர். இதனால், கேள்வித்தாளை உருவாக்கிய இரண்டு நிபுணர்களையும் பிளாக் லிஸ்டில் வைத்ததோடு, இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாம்: சிவசேனா அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீர் மாயம் – மகாராஷ்ட்ரா அரசை கவிழ்க்க சதியா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM