குஜராத்தில் ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கெவாடியாவின் தென்கிழக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில், ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.1ஆக பதிவானது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நினைவுச்சின்னத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் படேல்தெரிவித்தார்.