டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக அமைச்சரவையில் ஒன்றிய நிதி அமைச்சராக பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை விலகினார்.