டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சந்தித்து பேசினர். குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக வெங்கைய நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆலோசனை நடத்தி வருகின்றனர்.