நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் சுற்றுதலங்களை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் குன்னூர் நகரப் பகுதியில் காலை முதல் சாரல் மழைப் பெய்வதால் குளிர்ந்த கால நிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லேம்ஸ்ராக்,டால்பினோஸ் போன்ற காட்சிமுனைகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது, இதன் காரணமாக காட்சிமுனைகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகளில் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
குன்னூரில் இருந்து காட்சிமுனைகளை காணப்பதற்காக செல்லும் சாலைகளிலும் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் திணறினர், காலை முதல் குன்னூர் நகரப் பகுதியில் சாரல் மழையும் குளிரும் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் குளிரின் காரணமாக பல்வேறு தனியார் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.
மூடுபனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் போவதால் முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்கும் சூழல் உள்ளது அவ்வப் போது போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
செய்தியாளர் – ஜான்சன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM