கேரள மாநிலம் காசர்கோட்டில் 10 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
உப்பலா பகுதியைச் சேர்ந்த லத்தீப் என்பவர் தனது குடும்பத்தினருடன் பத்வாடி பகுதிக்கு ஆட்டோவில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மலைப்பகுதியில் இருந்து 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.