எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை சமாளித்து உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,அரச மற்றும் தனியார் துறைகளும் மதஸ்தலங்களும் இந்த வேலைத்திட்டங்களில் கைகோர்த்துள்ளன. வயோதிப இல்லங்களுக்குச் சொந்தமான காணிகளும் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும்.கொலன்தொட்ட பயிர்ச்செய்கை புரட்சி என்ற பெயரில் 3 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட விவசாய வேலைத்திட்டம் மீள் ஒழுங்கு செய்யப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
699 சதுர கிலோ நிலப்பரப்பில் 24 இலட்சம் மக்கள் சுமார் 5 இலட்சத்து 90 ஆயிரம் வீடுகளில் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர் ,இந்த விவசாய வேலைத்திட்டம் கொவிட் தொற்றுக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.