சர்வதேச யோகா தினம் இன்றாகும்.
இதனையொட்டி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவுக்கு அமைய, 2015ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்றைய யோகா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.