சீனாவின் கடற்கரை நகரமான பெய்டெய்ஹேவிற்குள் ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை டெஸ்லா கார்கள் நுழைய தடைசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பிரிட்டனில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெபே மாகாணத்தில் ஜூலை இறுதியில் தொடங்கும் கோடைக்கால உச்சி மாநாட்டில் டெஸ்லா கார்களில் பொருத்தப்பட்டுள்ள 8 கேமராக்கள், மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் மூலம் உளவு பார்க்கப்படலாம் என்பதால் தடை விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.