சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நண்பகல் 12 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ளதை அடுத்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 250 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோரத்தில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.