தூத்துக்குடி நீதிமன்றம் முன் தந்தையை வெட்டி கொலை செய்ய முயன்ற மகனை அவரது தந்தையின் கூட்டாளிகள் அங்கேயே வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காசிராஜன் என்பவர் சொத்து பிரச்சனையால் தொடர்ந்த வழக்கில் அவரது தந்தை தமிழ் அழகன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.
வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தமிழ் அழகனை அவரது மகன் காசி ராஜன் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், அவரது கையில் இருந்த அரிவாளை பறித்த தமிழ் அழகனின் கூட்டாளிகள் காசிராஜனை அங்கேயே வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.