சென்னை அடுத்து வானகரத்தில் வரும் 23ஆம் தேதியன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கூட்டம் நடைபெற உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நுழைவு வாயில் முதல் உள்மண்டபம் வரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மண்டபத்தில் அலங்கார வளைவுகளும், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையிலான பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.