ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கான விடுமுறை குறித்து பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம்.
பொதுவாக இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள பொது விடுமுறை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக அளிக்கப்படுகின்றன.
திடீரென வேகமெடுக்கும் ரஷ்யா – இந்திய வங்கி சேவை.. இதுதான் காரணமா..?!
பக்ரீத் விடுமுறை
ஆனால் இந்த ஜூலை மாதத்தில் சனி, ஞாயிறு தவிர ஒரே ஒரு நாள் மட்டுமே பக்ரீத் பண்டிகை விடுமுறையாக வங்கிகளுக்கு உள்ளது. ஆனால் அந்த பக்ரீத் பண்டிகையும் ஜூலை 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் ஜூலை மாதத்தில் சனி, ஞாயிறு தவிர வேறு எந்த விடுமுறையும் இல்லை என்பது வங்கி ஊழியர்களுக்கு பெரும் சோகமாக உள்ளது.
உள்ளூர் விடுமுறை
ஒரு சில மாநிலங்களில் மாநில அளவில் நடத்தப்படும் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவில் வங்கிகளுக்கு விடுமுறையாக அளிக்கப்படும். ஆனால் அது மாதிரி எந்த விடுமுறையும் தமிழகம் உள்பட எந்த மாநிலத்திலும் வரும் ஜூலை மாதம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி பணப்பரிவர்த்தனை
ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டால் வங்கிகளுக்கான பணப்பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமின்றி விடுமுறையை கணக்கில் கொண்டு முன்கூட்டியே தேவையான வங்கி வேலைகளை முடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலையில் விடுமுறை
ஆனால் இந்த ஜூலை மாதம் அது மாதிரி எந்தவித டென்ஷனும் இல்லாமல் வங்கி வாடிக்கையாளர்கள் இருக்கலாம். ஏனெனில் சனி, ஞாயிறு தவிர வேறு எந்த விடுமுறையும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
6 நாட்கள்
ஜூலை மாதம் விடுமுறை குறைவு என்பது வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் வங்கி ஊழியர்கள் வெறும் 6 நாட்களே இந்த மாதம் விடுமுறை என்பதால் சோகத்தில் உள்ளனர்.
விடுமுறை விபரங்கள்
இப்போது ஜூலை மாதம் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பதை பார்ப்போம். ஜூலை மாத வங்கி விடுமுறை தினங்கள் பின்வருவன:
ஜூலை 3 – ஞாயிறு விடுமுறை
ஜூலை 9 – இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை
ஜூலை 10 – ஞாயிறு / பக்ரித் பண்டிகை
ஜூலை 17 – ஞாயிறு விடுமுறை
ஜூலை 23 – நான்காம் சனிக்கிழமை விடுமுறை
ஜூலை 24 – ஞாயிறு விடுமுறை
ஜூலை 31 – ஞாயிறு விடுமுறை
List of Bank Holidays in July 2022 in Tamil Nadu and India
List of Bank Holidays in July 2022 in Tamil Nadu and India | ஜூலையில் இவ்வளவு தான் லீவா? வங்கி ஊழியர்கள் சோகம்!