திருச்சி மாவட்டத்தில் வாகன சோதனையின் போது அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி – புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரை சோதனையிட்ட போது வீச்சறிவாள், கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
காரிலிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், தற்காப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்த நிலையில், போலீசார் ஏழு பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.