நோயில்லா வாழ்க்கையை உறுதி செய்ய நமது சித்தர்கள் உருவாக்கிய அற்புதக் கலை யோகாசனம். இன்று உலக யோகாசன நாள் கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
“அகமும், புறமும் நலம் பெறுவதற்கான அருமருந்து யோகாசனம் :
நோயில்லா வாழ்க்கையை உறுதி செய்ய நமது சித்தர்கள் உருவாக்கிய அற்புதக் கலை யோகாசனம். உடலையும், மனதையும் வலுப்படுத்தும் அருமருந்து யோகாசனம். இதை அனுபவித்து உணர்ந்தவன் நான். உலக யோகா நாளான இன்று முதல் அனைவரும் யோகாசனம் செய்வோம்; உடல், மனநலம் காப்போம்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
“உலக யோகாசன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை. தீரா நோய்களை கட்டுப்படுத்த யோகா அருமருந்து. இதன் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அதற்காக யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்” என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.