நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? – கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி

இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாடாக, நேபாளம் உள்ளது.

இந்திய ராணுவத்தில் கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் என்ற படைப் பிரிவுகள் உள்ளன. அதில் 35 பட்டாலியன்கள் உள்ளன. இவற்றில் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் பணியமர்த்தப்படுகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்தியா, பிரிட்டன் மற்றும் நேபாளம் இடையே ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, நேபாள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்திய ராணுவத்தில், 7 கூர்க்கா ரெஜிமென்ட்ஸ்கள் உள்ளன. இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள ஒரே வெளிநாடாக நேபாளம் உள்ளது.

image
கூர்க்கா ரெஜிமென்ட்ஸ் படைப் பிரிவில் சேரும் இளைஞர்கள் பெரும்பாலும், மாகர் மற்றும் குருங்க் போன்ற நேபாள மலைவாழ் சமூகத்தினராக இருக்கின்றனர். அதேபோல் கிழக்கு நேபாளத்தை சேர்ந்த கிராட்டி ராய், லிம்புஸ் சமூகத்தினரும், இந்தப் படைப் பிரிவில் அதிகளவில் சேருகின்றனர். மிகுந்த தைரியமும், வீரமும், விசுவாசமும் மிக்கவர்களான இவர்கள், தேசிய பாதுகாப்பு அகாடமி நடத்தும் தேர்வுகள் அல்லது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுகளை எழுதி இந்திய ராணுவத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். அவர்கள் தகுதிக்கேற்ப ராணுவத்தில் படை வீரர்களாகவும், அதிகாரிகளாகவும் பணியாற்றலாம்.

கார்கில் போரின் போது கூர்கா ரைபிள் பிரிவு பட்டாலியனில் சிறப்பாக செயல்பட்டதற்காக, வீர் சக்ரா விருது பெற்ற கர்னல் லலித் ராய், நேபாள நாட்டை சேர்ந்தவர் ஆவார்.  அதேபோல் 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் முக்கியப்பங்கு வகித்த வடக்கு ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹூடாவும் நேபாள நாட்டை சேர்ந்தவர்தான்.

image
நேபாள ராணுவமும், ராணுவம் சார்ந்த பயிற்சிகளை பெறுவதாக அவர்களது அதிகாரிகளை, இந்திய ராணுவத்திடமும், அதற்கான கல்லூரிகளுக்கும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபிறகு இந்தியர்கள் அடையும் பலன்களை போலவே, நேபாள நாட்டவரும் பலன்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், காப்பீடு வசதிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறாக இந்தியா, நேபாளம் இடையிலான ராணுவ உறவு  நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது.

இதையும் படிக்கலாம்: மாநிலத்துக்கு மாநிலம் மாறும் மதிப்பு… எப்படி நடக்கிறது குடியரசுத் தலைவர் தேர்தல்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.