நோபல் பரிசை விற்று ரூ.808 கோடியை உக்ரைன் குழந்தைகளுக்காக வழங்கிய ரஷிய பத்திரிகையாளர்

நியூயார்க்,

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடந்து வருகிறது. இந்த போரினால் பொதுமக்கள் பலர் உயிர் இழந்துள்ளனர். குறிப்பாக பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர்.

இந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுயுடன் இவருக்கு தங்க பதக்கமும், 5 லட்சம் டாலரும் பரிசாக வழங்கப்பட்டது. பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

ஹெரிடேஜ் எனும் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்து முடிந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு தற்போது 103 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 808 (8,07,85,89,000 ) கோடி ரூபாய்க்கு ஏலம் போகியுள்ளது.

இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக,ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நிறுவனமான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியதிற்கு பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் வழங்கியுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.