இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் ஒரு தொகுதி இன்றைய தினம் பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகல ,பதுளை ஹாலி எல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு பகுந்து அளிப்பதற்காக பதுளை புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
இதில் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 1800 அரிசி மூட்டைகளும் ,லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் ,பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசியை மூட்டைகளும் ,ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.
இந்த அரிசி பொதிகள் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.